சமீபத்தில் பீஹார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்து இருக்கிறது.
காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும் என்று கோரிக்கையை எழுப்பி வருகின்றன. அதில் சமீபத்தில் பீஹார் அரசு இந்த கணக்கெடுப்பை நடத்தி முடித்திருக்கிறது. இதன் அடுத்த வரிசையில் ஆந்திர மாநிலம் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருக்கிறது. அதன்படி ஆந்திர மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு மந்திரி சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி விரிவான சாதி வாரி கணக்கெடுப்பு தொடங்கும் என அறிவித்துள்ளார்.