சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுக்கு 75% வருகை அவசியம் – கடும் நடவடிக்கை எச்சரிக்கை

August 7, 2025

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் எழுத 75% வருகை கட்டாயம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. விதிகளை மீறினால் தேர்வில் பங்கேற்பது தடை செய்யப்படும். மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வெளியிட்ட சுற்றறிக்கையில், பள்ளிகளில் குறைந்தபட்சம் 75% வருகை அவசியம் எனவும், மருத்துவ அவசரம், தேசிய/சர்வதேச விளையாட்டு போட்டி போன்றவற்றுக்கு சான்றுகள் இருந்தால் 25% வரை தளர்வு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வருகைப் பதிவுகள் தினமும் புதுப்பிக்கப்பட வேண்டும். எழுத்துப்பூர்வ ஆவணமில்லாமல் விடுப்பு எடுக்கப்பட்டால் […]

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் எழுத 75% வருகை கட்டாயம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. விதிகளை மீறினால் தேர்வில் பங்கேற்பது தடை செய்யப்படும்.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வெளியிட்ட சுற்றறிக்கையில், பள்ளிகளில் குறைந்தபட்சம் 75% வருகை அவசியம் எனவும், மருத்துவ அவசரம், தேசிய/சர்வதேச விளையாட்டு போட்டி போன்றவற்றுக்கு சான்றுகள் இருந்தால் 25% வரை தளர்வு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வருகைப் பதிவுகள் தினமும் புதுப்பிக்கப்பட வேண்டும். எழுத்துப்பூர்வ ஆவணமில்லாமல் விடுப்பு எடுக்கப்பட்டால் அங்கீகரிக்கப்படாது. போலி வருகை பதிவுகள் கண்டறியப்பட்டால், மாணவர்கள் தேர்வில் இருந்து நீக்கப்படுவார்கள்; பள்ளிகளுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu