நடப்பு ஆண்டு முதல் 3 மற்றும் 6 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 3 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய பாடநூல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இவை விரைவில் வெளியிடப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியத்திடம் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. அதன்படி என்சிஆர்டி கடந்த ஆண்டு வெளியிட்ட பாடநூல்களுக்கு பதிலாக தற்போது வெளியிடவுள்ள புதிய பாடத்திட்டம் மற்றும் பாட நூல்களை 3 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பின்பற்றுமாறு சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிபிஎஸ்சி பள்ளிகளில் வேறு எந்த வகுப்புக்கும் ஏப்ரல் 1 முதல் தொடங்கும் புதிய கல்வி ஆண்டில் பாடத்திட்டம் மற்றும் பாடல்கள் மாற்றமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.