மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவு வெளியீடு

உச்ச நீதிமன்ற உதவியின் படி நீட் தேர்வு முடிவுகள் நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியீடு செய்யப்பட்டுள்ளன. எம்பிபிஎஸ் படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால் மறுதேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். அதே நேரத்தில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மத்திய அரசு மற்றும் மத்திய தேர்வு முகமை மறு தேர்வு நடத்த சம்மதம் என தெரிவித்தால் அதற்கு […]

உச்ச நீதிமன்ற உதவியின் படி நீட் தேர்வு முடிவுகள் நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியீடு செய்யப்பட்டுள்ளன.

எம்பிபிஎஸ் படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால் மறுதேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். அதே நேரத்தில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மத்திய அரசு மற்றும் மத்திய தேர்வு முகமை மறு தேர்வு நடத்த சம்மதம் என தெரிவித்தால் அதற்கு ஏற்ப உத்தரவு வழங்கக்கூடாது என வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த போது மறு தேர்விற்கு நீதிமன்றம் உத்தரவிட மறுத்தது. ஆனால் தேசிய தேர்வு முகமை தேர்வு முடிவுகளை மையங்கள் வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும் இருபதாம் தேதி மதியம் 2 மணிக்குள் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதன் முடிவுகளை exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu