சந்திரயான்-5 திட்டத்திற்கும் மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் அறிவித்துள்ளார்.
சந்திராயனை ஆராய்வதற்கான புதிய முயற்சியாக, சந்திரயான்-5 திட்டத்திற்கும் மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த மிஷன் 250 கிலோ எடையுள்ள ரோவரை சந்திரனுக்கு அனுப்பும் என்றும், இது முந்தைய சந்திரயான்-3 திட்டத்தை விட மிகுந்த முனைப்புடன் செயல்படும் என்றும் கூறினார்.
2008ல் சந்திரயான்-1 வெற்றிகரமாக ஏவப்பட்டு, சந்திரனின் வேதியியல் மற்றும் புவியியல் தரவுகளை வழங்கியது. 2019ல் ஏவப்பட்ட சந்திரயான்-2 அதன் இறுதி கட்டத்தில் சில சிக்கல்களை சந்தித்தாலும், 2023ல் சந்திரயான்-3 முழுமையாக வெற்றி பெற்றது. 2027ல் திட்டமிடப்பட்ட சந்திரயான்-4, நிலவில் இருந்து மாதிரிகளைப் பெற்றுவரும் முன்முயற்சியாக இருக்கும். மேலும் சந்திரயான்-5 திட்டம் ஜப்பானுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என்றும், பாரதிய விண்வெளி நிலையம் அமைப்பதற்கான பணிகளும் முன்னேறி வருவதாகவும் நாராயணன் தெரிவித்தார்.