மாநில அரசுகளுக்கான வரி பகிர்வு விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, மாநில அரசுகள் தங்கள் வளர்ச்சி திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.
இந்த முறை, தமிழகத்திற்கு மாநில வரி பகிர்வு 5700.44 கோடி ரூபாயாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு 25069.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக கோவா மாநிலத்திற்கு 539.42 கோடி வழங்கப்படுகிறது. மேலும், ஆந்திர பிரதேசத்துக்கு 5655.72 கோடி, கர்நாடகாவுக்கு 5096.72 கோடி, கேரளாவுக்கு 2690.2 கோடி, தெலுங்கானாவுக்கு 2937.58 கோடி, மேற்கு வங்கத்துக்கு 10513.46 கோடி, ராஜஸ்தானுக்கு 8421.38 கோடி, மத்திய பிரதேசத்துக்கு 10970.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில், 139750.92 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.