இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளை பாதித்துள்ளது. அந்த வகையில், இந்திய பங்குச்சந்தை இன்று மிகப்பெரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 845.12 புள்ளிகள் சரிந்து 73399.78 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 246.91 புள்ளிகள் சரிந்து 22272.5 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. ஸ்ரீராம் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், விப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி, அதானி போர்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், என்டிபிசி, பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் இன்று சரிவை சந்தித்துள்ளன.