இந்திய நாட்டின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு, வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
‘ரிபப்ளிக் ஆப் பாரத்’ என்ற பெயரில் இந்தியாவின் பெயர் மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன. மத்திய அரசு, இந்த தீர்மானத்தை தாக்கல் செய்வதற்காகவே நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்டுவதாகவும் பேசப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை. ஆனால், ஜி 20 மாநாட்டு அழைப்புக்கான குடியரசு தலைவரின் அழைப்பிதழில், ‘பாரத குடியரசு தலைவர்’ (பிரசிடெண்ட் ஆப் பாரத்) என்ற பெயரில் திரௌபதி முர்மு குறிப்பிடப்பட்டுள்ளார். இது இந்திய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் இது தொடர்பாக தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.