80 ரூபாய்க்கு தக்காளி விற்பனை - மத்திய அரசு முடிவு

தக்காளி விலை உயர்வு காரணமாக எளிய மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதால், மானிய விலையில் தக்காளி விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முக்கியமான இந்திய நகரங்களில் 80 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த வெள்ளிக்கிழமை, டெல்லி என் சி ஆர் பகுதியில் 90 ரூபாய் தக்காளி விற்பனையை மத்திய அரசு தொடங்கியது. அதை தொடர்ந்து, சனிக்கிழமை, வேறு சில நகரங்களில் மானிய விலை தக்காளி விற்பனை அறிமுகமானது. இந்நிலையில், இன்று […]

தக்காளி விலை உயர்வு காரணமாக எளிய மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதால், மானிய விலையில் தக்காளி விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முக்கியமான இந்திய நகரங்களில் 80 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த வெள்ளிக்கிழமை, டெல்லி என் சி ஆர் பகுதியில் 90 ரூபாய் தக்காளி விற்பனையை மத்திய அரசு தொடங்கியது. அதை தொடர்ந்து, சனிக்கிழமை, வேறு சில நகரங்களில் மானிய விலை தக்காளி விற்பனை அறிமுகமானது. இந்நிலையில், இன்று முதல், இந்த திட்டம் பல்வேறு இந்திய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கூட்டுறவு சங்கங்கள், என்சிசிஎஃப், நாஃபெட் மையம் சார்பில் இயக்கப்படும் மொபைல் வேன்கள் ஆகியவற்றில் மானிய விலை தக்காளி விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், டெல்லி, லக்னோ, நொய்டா, கான்பூர், வாரணாசி, பாட்னா முஸாபர்பூர் போன்ற இடங்களில் இந்திய தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் மானிய வெள்ளை தக்காளி விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த திட்டம் எளிய மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu