தமிழ் நாட்டுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுப்பு

தமிழ் நாட்டுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. திறந்த வெளி சந்தை திட்டத்தின் கீழ் மத்திய தொகுப்பில் இருந்து மாநில அரசுகளுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கி வருகிறது. இந்த நிலையில் கூடுதலாக தங்களுக்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுவதாக தமிழ் நாடு […]

தமிழ் நாட்டுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது.

திறந்த வெளி சந்தை திட்டத்தின் கீழ் மத்திய தொகுப்பில் இருந்து மாநில அரசுகளுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கி வருகிறது. இந்த நிலையில் கூடுதலாக தங்களுக்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுவதாக தமிழ் நாடு அரசு சார்பில் இந்திய உணவு கழகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதே போல கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும் கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ளது. பல மாநிலங்களுக்கு அரிசி விற்பனை செய்வதை மத்திய அரசு நிறுத்தி உள்ளது.

இந்நிலையில் மாநில அரசுகள் தேவைப்பட்டால் சந்தையில் இருந்து அரிசியை வாங்கி கொள்ளலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உணவுத்துறை மந்திரி பியூஸ் கோயல் அறிவித்தார். அதன்படி அடுத்த மாதம் 5-ந்தேதி திறந்த மார்க்கெட் திட்டத்தின் மூலம் அரிசி விற்பனையை தொடங்க இருக்கிறது. இதற்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,100 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu