கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் - 1 வருடம் அவகாசம் கொடுத்து நிதின் கட்காரி அறிவிப்பு

September 29, 2022

வரும் அக்டோபர் 2023 ஆம் ஆண்டு முதல், அனைத்து கார்களிலும், 6 ஏர்பேக்குகள் இருப்பது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மேலும், உலக அளவில் ஏற்பட்டுள்ள விநியோகச் சங்கிலி சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்த ஒரு வருட கால அவகாசம் தரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது குறித்த அறிவிப்பை, அவர் ட்விட்டர் பதிவு மூலமாக வெளியிட்டார். முன்னதாக, கடந்த ஜனவரி 14ம் தேதி, ஏர் பேக்குகள் குறித்த […]

வரும் அக்டோபர் 2023 ஆம் ஆண்டு முதல், அனைத்து கார்களிலும், 6 ஏர்பேக்குகள் இருப்பது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மேலும், உலக அளவில் ஏற்பட்டுள்ள விநியோகச் சங்கிலி சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்த ஒரு வருட கால அவகாசம் தரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது குறித்த அறிவிப்பை, அவர் ட்விட்டர் பதிவு மூலமாக வெளியிட்டார்.

முன்னதாக, கடந்த ஜனவரி 14ம் தேதி, ஏர் பேக்குகள் குறித்த முதல் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பின்படி, "ஒவ்வொரு காரிலும், முன் இருக்கையில் அமர்ந்துள்ள நபர்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு முன்பக்க ஏர் பேக்கும், ஒரு பக்கவாட்டு ஏர் பேக்கும் இருக்க வேண்டும். அத்துடன், பக்கவாட்டில் அமர்ந்துள்ள ஒவ்வொரு நபருக்கும், தலா ஒரு பக்கவாட்டு ஏர்பேக் இருக்க வேண்டும். அக்டோபர் 1, 2022 முதல், விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு காரிலும் இந்த அம்சம் கட்டாயமாக இடம்பெற வேண்டும்" என்ற விதி உருவாக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினால், வாகன உற்பத்திக்கான செலவு அதிகரிக்கும் என்று வாகன உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். மேலும், விலை உயர்வு காரணமாக வாகன விற்பனை குறையும் என்று கூறினர். உற்பத்தியாளர்களின் கருத்து குறித்து கடந்த மாதம் வரையில் அமைச்சரவை பரிசீலித்து வந்தது. அதன் பிறகு, அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கூடுதலாக ஒரு ஏர் பேக் அமைப்பதற்கு 900 ரூபாய் மட்டுமே செலவாகும். இது உற்பத்தி செலவில் பெரிய மாற்றமாக இருக்காது. மேலும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் உள்நாட்டில் விற்கப்படும் கார்களில் இடம்பெறவில்லை. உற்பத்தியாளர்கள் தரப்பிலிருந்து இந்த பாகுபாட்டை களைய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

"பயணிகளின் பாதுகாப்பே வாகன உற்பத்தியில் முதன்மையாக கருதப்பட வேண்டும்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிதின் கட்காரி, குறைந்த விலையில் வாகன உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சத்தை ஏன் முக்கியமாக கருதவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், கார்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளால், சாலை விபத்துகளில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்படுவதாக வருத்தம் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu