தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் 16, 17 ஆம் தேதிகளில் கனமழைவாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை இருக்கும். மேலும் நாளை சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். மேலும் 16,17 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,ராமநாதபுரம், புதுக்கோட்டை,தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களிலும் கன மழை வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.