உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயர் பரிந்துரை

October 11, 2022

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது யு.யு. லலித் பதவி வகித்து வருகிறார். அவர் அடுத்த மாதம் 8-ம் தேதி பணி நிறைவு செய்கிறார். இதையடுத்து தலைமை நீதிபதி பெயரை சிபாரிசு செய்யுமாறு தலைமை நீதிபதி யு.யு. லலித்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி யு.யு. லலித் பரிந்துரை செய்துள்ளார். […]

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது யு.யு. லலித் பதவி வகித்து வருகிறார். அவர் அடுத்த மாதம் 8-ம் தேதி பணி நிறைவு செய்கிறார். இதையடுத்து தலைமை நீதிபதி பெயரை சிபாரிசு செய்யுமாறு தலைமை நீதிபதி யு.யு. லலித்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி யு.யு. லலித் பரிந்துரை செய்துள்ளார். இதற்கான பரிந்துரை கடிதத்தை இன்று காலை 11 மணியளவில் தலைமை நீதிபதி யு.யு.லலித் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக மிக மூத்த நீதிபதியான டி.ஒய். சந்திரசூட் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அவர் நவம்பர் 9-ம் தேதி நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் 2024-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதிவரை அப்பொறுப்பில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu