ஜோஹோ நிறுவனத்தின் சிஇஓ பதவியில் மாற்றம்

January 28, 2025

ஜோஹோ (ZOHO) இன் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பதவியில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார். தமிழகத்தின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனம் ஜோஹோ (ZOHO) இன் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பதவியில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார். சென்னையில் தலைமையிடத்தை கொண்ட ஜோஹோ, 50க்கும் மேற்பட்ட நாடுகளில் மென்பொருள் சேவைகளை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. இப்போது, ஸ்ரீதர் வேம்பு புதிய "Chief Scientist" என்ற பொறுப்பை ஏற்க உள்ளார். நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு […]

ஜோஹோ (ZOHO) இன் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பதவியில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார்.

தமிழகத்தின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனம் ஜோஹோ (ZOHO) இன் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பதவியில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார். சென்னையில் தலைமையிடத்தை கொண்ட ஜோஹோ, 50க்கும் மேற்பட்ட நாடுகளில் மென்பொருள் சேவைகளை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது.

இப்போது, ஸ்ரீதர் வேம்பு புதிய "Chief Scientist" என்ற பொறுப்பை ஏற்க உள்ளார். நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு தலைமை தாங்குவார். தற்போது, மென்பொருள் தொழிலில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற புதிய மாற்றங்கள் நேர்ந்துள்ள நிலையில், இந்த தலைமை மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஜோஹோ நிறுவனத்தின் புதிய சிஇஓயாக ஷைலேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். டோனி தாமஸ், ஜோஹோ US பிரிவின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார். மேலும், ராஜேஷ் கணேசன் ManageEngine பிரிவையும், மணி வேம்பு Zoho.com பிரிவையும் வழிநடத்துவார்கள் என்று ஸ்ரீதர் வேம்பு தமது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu