பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல்- மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி இடையே ஆன எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பராமரிப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து நியூஜல்பைகுரிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் ஹிஜ்லி, கரக்பூர், பட்டா நகர் வழித்தடத்தில் செல்கிறது. அதேபோன்று மேற்குவங்க மாநிலம் புரூலியாவிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரயில் 26 ஆம் தேதியில் 2 மணி நேரம் தாமதமாக 12 மணிக்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.