2 மாதங்களில் 100 மில்லியன் பயனர்கள் - வரலாறு படைத்த சாட் ஜிபிடி

February 2, 2023

ஓபன் ஏஐ நிறுவனம் வெளியிட்டுள்ள சாட் ஜிபிடி என்ற சாட் பாட் செயலி, புதிய வரலாறு படைத்துள்ளது. வெளிவந்த இரண்டே மாதங்களில், 100 மில்லியன் மாதாந்திர பயனர்களை பெற்று, வேகமாக வளரும் தளமாக உருவெடுத்துள்ளது. இந்த தளத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நாளுக்கு சராசரியாக, 13 மில்லியன் பயனர்கள் வருகை தருவது தெரிய வந்துள்ளது. முன்னதாக, 100 மில்லியன் பயனர்களை எட்ட, டிக் டாக் செயலிக்கு 9 மாதங்களும், இன்ஸ்டாகிராம் செயலிக்கு 2 1/2 ஆண்டுகளும் ஆனது […]

ஓபன் ஏஐ நிறுவனம் வெளியிட்டுள்ள சாட் ஜிபிடி என்ற சாட் பாட் செயலி, புதிய வரலாறு படைத்துள்ளது. வெளிவந்த இரண்டே மாதங்களில், 100 மில்லியன் மாதாந்திர பயனர்களை பெற்று, வேகமாக வளரும் தளமாக உருவெடுத்துள்ளது. இந்த தளத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நாளுக்கு சராசரியாக, 13 மில்லியன் பயனர்கள் வருகை தருவது தெரிய வந்துள்ளது.

முன்னதாக, 100 மில்லியன் பயனர்களை எட்ட, டிக் டாக் செயலிக்கு 9 மாதங்களும், இன்ஸ்டாகிராம் செயலிக்கு 2 1/2 ஆண்டுகளும் ஆனது குறிப்பிடத்தக்கது. எனவே, கடந்த 20 ஆண்டு கால இணையதள நிகழ்வுகளில், சாட் ஜிபிடி வரலாறு படைத்ததாக கூறப்படுகிறது. மேலும், பொது மக்களிடையே இதற்கு பெரும் வரவேற்பு உள்ளதால், இது இணையதள வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu