அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனிதர்களின் வயதை குறைக்கும் வேதி கலவையை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.
முன்னதாக, மரபணு சிகிச்சை மூலம் மனிதர்களுக்கு வயதாவதை தடுக்க முடியும் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டது. தற்போது, குறிப்பிட்ட வேதி கலவை மூலமாகவும் மனிதர்களுக்கு வயதாவதை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, ஹார்வர்டு விஞ்ஞானிகள் நடத்திய தீவிர ஆராய்ச்சியில் இது நிரூபணம் ஆகியுள்ளது. ஹார்வர்டு விஞ்ஞானி டேவிட் சென்கிளயர் இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், குறைந்த செலவில் மனித செல்களுக்கு புத்துயிர் ஊட்டுவதற்கான முன் நகர்வாக இந்த ஆராய்ச்சி முடிவுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட வேதி கலவை, எலி மற்றும் குரங்குகள் மேல் பரிசோதிக்கப்பட்டு, வெற்றி கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.