நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்கள் - சென்னை முதலிடம்

February 17, 2023

கடந்த 2021-22 ஆம் ஆண்டில், நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்கள் குறித்த பட்டியலில் சென்னை விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. 2022 ஆம் நிதி ஆண்டில், சென்னை விமான நிலையத்தின் மொத்த நஷ்ட மதிப்பு 189.85 கோடி ரூபாய் மதிப்பில் பதிவாகியுள்ளது. மாநிலங்களவையில் விமான நிலையங்களின் லாபம் மற்றும் நஷ்டம் தொடர்பான தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் அளித்த பதிலில் இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. சென்னை மட்டுமின்றி, […]

கடந்த 2021-22 ஆம் ஆண்டில், நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்கள் குறித்த பட்டியலில் சென்னை விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. 2022 ஆம் நிதி ஆண்டில், சென்னை விமான நிலையத்தின் மொத்த நஷ்ட மதிப்பு 189.85 கோடி ரூபாய் மதிப்பில் பதிவாகியுள்ளது. மாநிலங்களவையில் விமான நிலையங்களின் லாபம் மற்றும் நஷ்டம் தொடர்பான தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் அளித்த பதிலில் இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

சென்னை மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் நஷ்டத்தில் இயங்கி வருவது இந்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. கோவை விமான நிலையம் 28.51 கோடி, மதுரை விமான நிலையம் 41.2 கோடி, சேலம் விமான நிலையம் 5.61 கோடி, திருச்சி விமான நிலையம் 19.17 கோடி, தூத்துக்குடி விமான நிலையம் 13.97 கோடி, என்ற அளவில் நஷ்டத்தை பதிவு செய்துள்ளன. அத்துடன், புதுவை விமான நிலையம் 12.36 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu