சென்னை கோர்ட் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம்

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை கோர்ட் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த மூன்று சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இன்று கோர்ட்டுக்கு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை ஐகோர்ட்டில் இன்று வக்கீல்கள் கோர்ட் […]

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை கோர்ட் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த மூன்று சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இன்று கோர்ட்டுக்கு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை ஐகோர்ட்டில் இன்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் வக்கீல்கள் சங்கத் தலைவர் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதன் காரணமாக இன்று வழக்கு விசாரணைக்காக பல வக்கீல்கள் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu