சென்னை குருவாயூர் விரைவு ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது.ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னை எழும்பூர் - குருவாயூருக்கு 15ஆம் தேதி முதல் இருபதாம் தேதி வரை மற்றும் 22ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ரயில் சேவை பகுதி நேர ரத்து செய்யப்பட உள்ளது.
மேலும் சென்னை சென்ட்ரல் - பாலக்காட்டிற்கு இன்று முதல் 29ஆம் தேதி வரை இயக்கப்படும் பாலக்காடு விரைவு ரயிலும், பாலக்காடு டவுன்- பாலக்காடு சந்திப்பு இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் பாலக்காட்டில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில், இன்று முதல் 30-ம் தேதி வரை பாலக்காடு சந்திப்பு - பாலக்காடு டவுன் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.