28 April 2022, சென்னை ஐஐடியில் கடந்த 19-ம் தேதி முதல் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து,ஐஐடி மற்றும் அதனைச் சுற்றியுள்ளவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் இதுவரை 6,650 பேருக்கு சோதனை செய்யப்பட்டு, இதில் 3,782 பேரின் முடிவுகள் தெரியவந்துள்ளது. இதில் 171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டும்,158 பேர் தொற்று சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.இச்சூழலில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் சில நபர்களுக்கு வேறு சில பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளனர். ஒருவருக்கு டெங்கு, ஒருவருக்கு டைபாய்டு, ஒருவருக்கு அம்மை நோய், ஒருவருக்கு வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தவிர்த்து கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு நோயின் தீவிரத் தன்மை மிகவும் குறைவாகதான் உள்ளது. அனைவரும் தடுப்பூசி செலுத்திவிட்ட காரணத்தால் யாருக்கும் பெரிய அளவு அறிகுறி இல்லை. ஒரு சிலருக்கு மட்டுமே காய்ச்சல் உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.