மீனம்பாக்கம் - விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையங்களிடையே இன்று ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிப்படைந்தது.
சென்னையில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரயில் சேவை மிகவும் உதவியாக இருந்து வருகிறது. இதில் தினமும் 3.2 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றார்கள். மேலும் மெட்ரோ ரயிலில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று காலை மீனம்பாக்கம் - விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையங்களிடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான நிலையத்திலிருந்து சென்ட்ரலுக்கு நேரடியாக மெட்ரோ ரயில்களை இயக்க முடியவில்லை. இதனால் ஆலந்தூர்- விமான நிலையம் இடையே சேவை பாதிக்கப்பட்டது. மேலும் இதனை சரி செய்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படும் என்று கூறியதால் அந்த வழித்தடத்தில் இன்று முழுவதும் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது