பிப்ரவரி 4ஆம் தேதி சென்னை ஓப்பன் ஏடிபி சேலஞ்சர் தொடர் தொடக்கம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் போட்டி பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆடவர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியானது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் பிப்ரவரி 4ம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. சென்னையில் ஆறாவது முறையாக ஏடிபி சேலஞ்சர் போட்டி நடத்தப்படுகிறது. இந்த தொடரில் 14 […]

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் போட்டி பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆடவர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியானது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் பிப்ரவரி 4ம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. சென்னையில் ஆறாவது முறையாக ஏடிபி சேலஞ்சர் போட்டி நடத்தப்படுகிறது. இந்த தொடரில் 14 நாடுகளில் இருந்து பல்வேறு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியில் பிப்ரவரி 4ம் தேதி தகுதிச்சுற்று ஆட்டங்களும், அதனைத் தொடர்ந்து 5ம் தேதி பிரதான சுற்றும் தொடங்குகிறது. பின்னர் 10ம் தேதி இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி மற்றும் 11ஆம் தேதி ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூபாய் 1.10 ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu