சென்னை ரயில்கள் தாமதம் பயணிகள் சிரமம்

November 29, 2023

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக புறப்பட்டன. தெற்கு ரயில்வே வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவள்ளூர் ரயில் நிலையத்தில் காலை 10:20 முதல் மதியம் 1.50 மணி வரை சிக்னல் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அறிவித்திருந்தது. மேலும் இதன் காரணமாக வேலூர் கான்டோன்மென்ட் இருந்து அரக்கோணம் செல்லும் விரைவு ரயில், கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மைசூர் - சென்னை […]

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக புறப்பட்டன.

தெற்கு ரயில்வே வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவள்ளூர் ரயில் நிலையத்தில் காலை 10:20 முதல் மதியம் 1.50 மணி வரை சிக்னல் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அறிவித்திருந்தது. மேலும் இதன் காரணமாக வேலூர் கான்டோன்மென்ட் இருந்து அரக்கோணம் செல்லும் விரைவு ரயில், கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மைசூர் - சென்னை செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ், பெங்களூர் - தானப்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ், மங்களூர் - சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் காலதாமதம் ஆக புறப்பட்டன. அதேபோல தானபூர் - பெங்களூர் சூப்பர் பாஸ்ட் ரயில், சென்னை - சீரடி செல்லும் எக்ஸ்பிரஸ், ஆகியவை கால தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அரசு அலுவலகங்கள் கல்லூரி செல்லும் மாணவர்கள், பயணிகள் உட்பட்ட பலர் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu