சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சேவை இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தூத்துக்குடியில் பல்வேறு இடங்கள் வெள்ள காடாக காட்சி அளித்தது. தற்போது அங்கு மழை வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியத்திலிருந்து விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று காலை முதல் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 64 பயணிகளுடன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் புறப்பட்டுள்ளது.