'தமிழ்நாடு அங்கக வேளாண் கொள்கை 2023'-யை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

March 14, 2023

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் "தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023"-யை வெளியிட்டார். 2021-2022ஆம் ஆண்டிற்கான வேளாண்மை - உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், "அதிக அளவு பயன்படுத்தப்பட்ட இரசாயன உரங்களாலும், பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள், மண்புழுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து மண்வளம் பாதிக்கப்பட்டதோடு சுற்றுப்புறச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கக்கூடிய, இயற்கை […]

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் "தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023"-யை வெளியிட்டார்.

2021-2022ஆம் ஆண்டிற்கான வேளாண்மை - உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், "அதிக அளவு பயன்படுத்தப்பட்ட இரசாயன உரங்களாலும், பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள், மண்புழுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து மண்வளம் பாதிக்கப்பட்டதோடு சுற்றுப்புறச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கக்கூடிய, இயற்கை வேளாண் விளைபொருட்களின் தேவையும் விழிப்புணர்வும் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, இயற்கை வேளாண்மை தொடர்பான பணிகளை சிறப்புக் கவனத்துடன் செயல்படுத்துவதற்கு, "வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கென்று தனிப் பிரிவு" ஒன்று உருவாக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டு உரிய ஆணைகள் வெளியிடப்பட்டன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu