ஓய்வு எடுப்பதற்காக கொடைக்கானல் சென்று இருந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை திரும்பினார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக கடந்த 29ஆம் தேதி கொடைக்கானலுக்கு சென்றிருந்தார். அங்குள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். அதனை தொடர்ந்து மறுநாள் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் கோல்டு கிளப் மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு கோல்ஃப் விளையாடி பொதுமக்களை சந்தித்தார். பின்னர் தனது குடும்பத்துடன் நேற்று மாலை 3:40 மணியளவில் விடுதியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்தடைந்தார். பின்னர் மதுரையில் இருந்து தனி விமான மூலம் புறப்பட்டு சென்னை திரும்பினார்.