வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி வருகிறார்கள். இதில் பீகார், அசாம், மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். முதலில் கட்டிட பணிக்கு வந்தவர்கள் இன்று ஓட்டல்கள், மளிகை கடை வரை பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள். வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், […]

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி வருகிறார்கள். இதில் பீகார், அசாம், மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். முதலில் கட்டிட பணிக்கு வந்தவர்கள் இன்று ஓட்டல்கள், மளிகை கடை வரை பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள். வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu