டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க வருமாறு முதலமைச்சர் முறைப்படி அழைப்பு விடுத்தார். கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1,000 படுக்கைகளுடன் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டை ஒட்டி கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார்.