மே 23 முதல் ஜூன் 2 வரை முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம்

இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் முதலீட்டாளர்களைச் சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 23-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை பயணம் செய்வது உறுதியாகியுள்ளது. தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் வகையில், தொடர் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 2024 ஜனவரி மாதம் 11, 12-ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்களைச் சந்திக்க வரும் […]

இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் முதலீட்டாளர்களைச் சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 23-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை பயணம் செய்வது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் வகையில், தொடர் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 2024 ஜனவரி மாதம் 11, 12-ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்களைச் சந்திக்க வரும் மே 23-ம் தேதி இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் நாடுகளுக்குச் செல்ல முதல்வர் திட்டமிட்டு, அதற்கான அனுமதி மத்திய அரசிடம் கோரப்பட்டது.

இந்த அனுமதி கிடைத்துள்ள நிலையில், வரும் 23-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu