இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு செல்வதாக இருந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லியில் ஒன்று கோடி ஆலோசனை நடத்த முடிவு செய்திருந்தனர். அதில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சித் தலைவர்களுக்கும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியானது. இதில் கலந்து கொள்வதற்காக மு.க ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக டி.ஆர் பாலு டெல்லி செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பங்கேற்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்