ராணுவத்துக்கு ரூ.18 லட்சத்து 33 ஆயிரம் கோடி ஒதுக்கியது சீனா

March 6, 2023

சீனா தனது ராணுவத்துக்கு ரூ.18 லட்சத்து 33 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இது இந்தியாவை விட 3 மடங்கு அதிகம் ஆகும். 20 லட்சம் வீரர்களுடன் உலகின் மிகப்பெரிய ராணுவமாக சீன ராணுவம் விளங்கி வருகிறது. மேலும் உலகிலேயே ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா 2-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து 8-வது ஆண்டாக இந்த ஆண்டும் சீனா ராணுவ பட்ஜெட்டை உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு ராணுவத்துக்கான பட்ஜெட் 7.2 […]

சீனா தனது ராணுவத்துக்கு ரூ.18 லட்சத்து 33 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இது இந்தியாவை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.

20 லட்சம் வீரர்களுடன் உலகின் மிகப்பெரிய ராணுவமாக சீன ராணுவம் விளங்கி வருகிறது. மேலும் உலகிலேயே ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா 2-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து 8-வது ஆண்டாக இந்த ஆண்டும் சீனா ராணுவ பட்ஜெட்டை உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு ராணுவத்துக்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வரைவு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 1.55 டிரில்லியன் யுவான் (சுமார் ரூ.18 லட்சத்து 33 ஆயிரம் கோடி) ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் மட்டுமே அதிகமாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu