பெய்ஜிங் - மருத்துவமனை தீ விபத்தில் 29 பேர் பலி

April 19, 2023

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில், நேற்று தீ விபத்து ஏற்பட்டதில், 29 பேர் பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில், சீனாவில் பதிவாகியுள்ள தீ விபத்துகளிலேயே இது மிகவும் மோசமானதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த விபத்தை அதிகாரிகள் மூடி மறைக்க திட்டமிட்டிருந்தனர். கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கு இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகவில்லை. மருத்துவமனை கட்டிடத்தில் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக தீ விபத்து […]

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில், நேற்று தீ விபத்து ஏற்பட்டதில், 29 பேர் பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில், சீனாவில் பதிவாகியுள்ள தீ விபத்துகளிலேயே இது மிகவும் மோசமானதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த விபத்தை அதிகாரிகள் மூடி மறைக்க திட்டமிட்டிருந்தனர். கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கு இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகவில்லை.

மருத்துவமனை கட்டிடத்தில் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக தீ விபத்து நேர்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் ஒரு மணி அளவில், தீ பரவுவதை உணர்ந்த மக்கள் ஜன்னல் வழியாகவும், குளிர் பதன பெட்டிகளுக்கான ஓட்டைகள் வழியாகவும் வெளியேற எத்தனித்தனர். அப்போது, பலர் காயமடைந்துள்ளனர். மேலும், தீயில் சிக்கி இறந்தவர்களில், நோயாளிகள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர் அடங்குவர் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu