அமெரிக்காவின் அயோவா சிறைச்சாலை கைதிகளுக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு

September 5, 2024

கடந்த 2023 மே மாதம், குரங்கு காய்ச்சல் தொற்றுக்கான உலகளாவிய அவசரநிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார மையம் அறிவித்தது. ஆனால், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 600க்கும் மேற்பட்டோர் இவ்வியாதி காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, ஆகஸ்ட் மாதம் மீண்டும் குரங்கு காய்ச்சல் தொற்று உலகளாவிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்டது. ஜூலை 31ஆம் தேதி வரை, உலகளவில் 1,02,997 உறுதிப்படுத்தப்பட்ட நோய் பாதிப்புகள் மற்றும் 223 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், அயோவாவில் உள்ள ஃபோர்ட் டாட்ஜ் […]

கடந்த 2023 மே மாதம், குரங்கு காய்ச்சல் தொற்றுக்கான உலகளாவிய அவசரநிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார மையம் அறிவித்தது. ஆனால், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 600க்கும் மேற்பட்டோர் இவ்வியாதி காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, ஆகஸ்ட் மாதம் மீண்டும் குரங்கு காய்ச்சல் தொற்று உலகளாவிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்டது. ஜூலை 31ஆம் தேதி வரை, உலகளவில் 1,02,997 உறுதிப்படுத்தப்பட்ட நோய் பாதிப்புகள் மற்றும் 223 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், அயோவாவில் உள்ள ஃபோர்ட் டாட்ஜ் வளாகத்திற்குள் குரங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

சொறி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் குரங்கு காய்ச்சல், காற்றின் மூலம் பரவாது என்றாலும், நெருங்கிய தொடர்பு மற்றும் பாதிக்கப்பட்ட பொருட்கள் மூலம் பரவுகிறது. சிறைச்சாலையில் இந்த நோய் எந்த அளவில் பரவியுள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், சிறை ஊழியர்கள் நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu