தென் கொரிய அதிபரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கடந்த 3ம் தேதி அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதையடுத்து, அவசர நிலை உத்தரவை திரும்பப்பெற்றார். பிறகு, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அதிபரின் பதவி நீக்கத்திற்கு தீர்மானம் கொண்டுவந்து, வாக்கெடுப்பில் அது நிறைவேற்றப்பட்டது. அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட யூன் சுக் இயோலை பதவி விலக்கி, ஹாங் டக் சோ இடைக்கால அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு, சோய் சங் மோக் இடைக்கால அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். யூன் சுக் இயோலின் நடவடிக்கைகள் குறித்து மத்திய ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. தற்போது கோர்ட்டு அவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.