சீனா தைவானைச் சுற்றி போர் பயிற்சிகளை மேற்கொள்கிறது

August 19, 2023

தைவானை சுற்றி கடலில் போர் பயிற்சிகளை தொடங்கியுள்ளது சீனா. தைவான் துணை அதிபர் வில்லியம் லாய் சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சீனா தன்னுடைய எதிர்ப்பை காட்டும் விதமாக தைவானை சுற்றி கடலில் போர் பயிற்சிகளை தொடங்கியுள்ளது. தைவான் தீவை சுற்றி சீன விமானப்படை மற்றும் கடற்படை கடல் ரோந்து, வான் பயிற்சி மற்றும் ராணுவ பயிற்சிகளை செய்ய தொடங்கியுள்ளது. இது குறித்து சீனா கூறும்போது, லாய் அமெரிக்க பயணம் […]

தைவானை சுற்றி கடலில் போர் பயிற்சிகளை தொடங்கியுள்ளது சீனா.

தைவான் துணை அதிபர் வில்லியம் லாய் சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சீனா தன்னுடைய எதிர்ப்பை காட்டும் விதமாக தைவானை சுற்றி கடலில் போர் பயிற்சிகளை தொடங்கியுள்ளது.

தைவான் தீவை சுற்றி சீன விமானப்படை மற்றும் கடற்படை கடல் ரோந்து, வான் பயிற்சி மற்றும் ராணுவ பயிற்சிகளை செய்ய தொடங்கியுள்ளது. இது குறித்து சீனா கூறும்போது, லாய் அமெரிக்க பயணம் மேற்கொண்டதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க சீனா உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறியுள்ளது. ராணுவ பயிற்சி குறித்த தகவல்களை சீன ராணுவ செய்தி தொடர்பாளர் ஷியி உறுதிபடுத்தியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu