சீனாவில் நிலக்கரி சுரங்க அலுவலகத்தில் தீ விபத்து - 26 பேர் பலி

November 17, 2023

சீனாவில் நிலக்கரி சுரங்க அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் பலியாகினர். சீனாவின் சாஞ்சி மாகாணம் லியுலியாங் நகரில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்க அலுவலக கம்பெனி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஐந்து தலங்கள் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலையில் வழக்கம் போல் பணியாளர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது இரண்டாவது தளத்தில் திடீரென தீ பற்றி எரிந்தது. இது பரவியதால் பணியாளர்கள் அலறிக் கொண்டு வெளியே ஓடினர். சிலர் தீப்பிடித்த பகுதியில் சிக்கிக் […]

சீனாவில் நிலக்கரி சுரங்க அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் பலியாகினர்.
சீனாவின் சாஞ்சி மாகாணம் லியுலியாங் நகரில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்க அலுவலக கம்பெனி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஐந்து தலங்கள் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலையில் வழக்கம் போல் பணியாளர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது இரண்டாவது தளத்தில் திடீரென தீ பற்றி எரிந்தது. இது பரவியதால் பணியாளர்கள் அலறிக் கொண்டு வெளியே ஓடினர். சிலர் தீப்பிடித்த பகுதியில் சிக்கிக் கொண்டனர். இது பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு குழுவினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் வைத்தனர். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 26 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 60க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu