அமெரிக்காவின் H-1B விசா கட்டணம் $1,00,000 ஆக உயர்த்திய நிலையில், சீனா திறமையான தெற்காசிய ஊழியர்களை ஈர்க்க புதிய விசா அறிமுகம் செய்கிறது.
அமெரிக்கா வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற $1,00,000 (ரூ.88 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு அடுத்த 12 மாதங்களுக்காக அமலில் இருக்கும் என்றும், பின்னர் நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும். 2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இது இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதில் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.இந்த சூழ்நிலையில், சீனா திறமையான தெற்காசிய ஊழியர்களை ஈர்க்க புதிய முயற்சியாக K-விசா அறிமுகப்படுத்தியுள்ளது. H-1B விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படும் உலகளாவிய திறமையான பணியாளர்களை தன்னரசுக்கே ஈர்க்கும் நோக்கில் இந்த விசா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய K-விசா நடைமுறை 2025 அக்டோபர் 1 முதல் அமலில் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திறமையான தொழில்நுட்ப, தொழில் நுட்ப மற்றும் சிறப்பு திறன் கொண்ட புலனாய்வு ஊழியர்கள் சீனாவில் வேலை வாய்ப்புகளைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும். இந்த புதிய விசா திட்டம், H-1B விசாவின் கடுமையான கட்டண உயர்வை எதிர்கொள்வதுடன், திறமையான வெளிநாட்டு பணியாளர்களுக்கு மாற்று வாய்ப்பை வழங்கும் முக்கியமான நடவடிக்கை என அறியப்படுகிறது.