ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி மென்பொருளுக்கு போட்டியாக, பல தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளன. தற்போது, சீனாவை சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனமான பைது, ‘எர்னி’ என்ற பெயரில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவான மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது. இது சாட் ஜிபிடிக்கு சவாலானதாக அமையும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய பைது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராபின் லீ, “நாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்து, இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளோம். எர்னியின் முதல் வடிவம் 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்து, புதிய வடிவம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 650 நிறுவனங்கள் எர்னியை பயன்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்” என்று கூறியுள்ளார். ஆனால், நேரடியாக எர்னி மென்பொருள் அறிமுகம் செய்யப்படாமல், ராபின் பேசிய வீடியோ மட்டுமே வெளியானதால், முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, நேற்றைய வர்த்தகத்தில் பைது நிறுவனத்தின் பங்கு மதிப்பு 6.4% சரிந்தது.