சுதந்திரம் அடைய வெளி சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து தைவான் எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் சீனா எதிர்ப்பை தெரிவிக்கும் என்று அதன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று தெரிவித்தார்.
லிதுவேனியாவில் சில்லு உற்பத்திக்காக 10 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான முதலீடு செய்ய உள்ளதாக தைவான் அறிவித்தது. இந்த திட்டத்தைப் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சீனாவிடமிருந்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன. மேலும் இது குறித்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில் தைவானின் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (டிபிபி) அதிகாரிகள் வெளிப்புற சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்ததால் தைவான் ஜலசந்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.