அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு புதிய பெயரிட்ட சீனா

April 1, 2024

இந்தியாவில் உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு, பல ஆண்டுகளாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. கடந்த 2017 ல், அருணாச்சலில் உள்ள 7 பகுதிகளுக்கும், 2021ல் 15 பகுதிகளுக்கும், 2023ல் 11 பகுதிகளுக்கும் புதிய பெயர்களை சீனா சூட்டியது. தற்போது, புதிதாக 30 இடங்களுக்கு பெயரிட்டுள்ளது/ சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அருணாச்சல் உள்ளதாக அந்நாடு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில், அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள கிட்டத்தட்ட 30 இடங்களுக்கு திபெத்திய மற்றும் ரோமானிய எழுத்துக்களை உள்ளடக்கி புதிய […]

இந்தியாவில் உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு, பல ஆண்டுகளாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. கடந்த 2017 ல், அருணாச்சலில் உள்ள 7 பகுதிகளுக்கும், 2021ல் 15 பகுதிகளுக்கும், 2023ல் 11 பகுதிகளுக்கும் புதிய பெயர்களை சீனா சூட்டியது. தற்போது, புதிதாக 30 இடங்களுக்கு பெயரிட்டுள்ளது/

சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அருணாச்சல் உள்ளதாக அந்நாடு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில், அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள கிட்டத்தட்ட 30 இடங்களுக்கு திபெத்திய மற்றும் ரோமானிய எழுத்துக்களை உள்ளடக்கி புதிய பெயர்களை சூட்டி உள்ளது. ஹாங்காங் நாளிதழில் சீன அரசு சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாநிலத்தில் உள்ள 11 கிராமங்கள், 12 மலைகள், ஒரு மலைப்பாதை, 4 ஆறுகள், ஒரு ஏரி மற்றும் குறுகிய நிலப்பகுதி ஆகியவற்றின் பெயர்களை மாற்றி சீனா அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனாவின் நடவடிக்கைகளுக்கு பல்வேறு முறை இந்தியா கண்டனம் தெரிவித்து வருகிறது. தேர்தல் நடைபெற உள்ள சூழலில் ஏற்பட்டுள்ள இந்த நிகழ்வு நாடு தழுவிய முறையில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu