ஈரான் ஆதரவுடன் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஷேக் முகமது அலி ஹமாதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இவர், 1985-ம் ஆண்டு 153 பயணிகளுடன் விமானத்தை கடத்தி, அமெரிக்கரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தவர். தற்போது, கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் அவரது வீட்டின் முன் ஆறு தோட்டாக்கள் பாய்ந்தது. இதன் மூலம் அவர் உயிரிழந்தார். அமெரிக்காவின் எப்.பி.ஐ. ஷேக் ஹமாதி குறித்து தேடுதல் அறிவித்திருந்தது. இக்கொலை சம்பவம், குடும்ப பிரச்சினைகள் காரணமாக நிகழ்ந்ததாக லெபனானில் உள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.














