தைவானை நோக்கி 71 போர் விமானங்கள் மற்றும் 7 போர்க்கப்பலை அனுப்பிய சீனா

December 27, 2022

சீனா தைவானை நோக்கி 71 போர் விமானங்களையும், 7 போர்க்கப்பல்களையும் அனுப்பியதாக தைவான் ராணுவ அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. தைவானுடனான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சட்டமசோதா ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் கையெழுத்திட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தைவான் வரவேற்ற நிலையில், சீனா அதை வன்மையாக கண்டித்தது. மேலும் தைவானை மிரட்டும் விதமாக கடந்த புதன்கிழமை தைவானை நோக்கி சீனா 39 போர் விமானங்களையும், 3 போர்க்கப்பல்களையும் அனுப்பியது. இதனால் இருநாடுகளின் எல்லையில் […]

சீனா தைவானை நோக்கி 71 போர் விமானங்களையும், 7 போர்க்கப்பல்களையும் அனுப்பியதாக தைவான் ராணுவ அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

தைவானுடனான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சட்டமசோதா ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் கையெழுத்திட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தைவான் வரவேற்ற நிலையில், சீனா அதை வன்மையாக கண்டித்தது. மேலும் தைவானை மிரட்டும் விதமாக கடந்த புதன்கிழமை தைவானை நோக்கி சீனா 39 போர் விமானங்களையும், 3 போர்க்கப்பல்களையும் அனுப்பியது. இதனால் இருநாடுகளின் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் உருவானது.

தைவானை சுற்றிய வான் மற்றும் நீர் பரப்பில் கடுமையான போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக சீன ராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவின் தலைவர் கூறினார். சீனாவின் இந்த திடீர் போர்ப்பயிற்சியால் இருநாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் முன்தினம் காலை 6 மணியில் இருந்து நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சீனா தைவானை நோக்கி 71 போர் விமானங்களையும், 7 போர்க்கப்பல்களையும் அனுப்பியதாக தைவான் ராணுவ அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu