சீனா, தனது சொந்த விண்வெளி நிலையத்தின் இறுதி பாகத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

November 1, 2022

சீனா, தனக்கென்று சொந்தமாக விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்துள்ளது. அதன் பாகங்களை பல்வேறு கட்டமாக விண்வெளியில் செலுத்தி வருகிறது. அந்த வகையில், நிலையத்தின் மூன்றாவது மற்றும் இறுதி பாகம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. திங்கட்கிழமை மதியம் லாங் மார்ச் 5பி ஒய்4 ராக்கெட் மூலம், ‘மெங்டியன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாகம், விண்வெளிக்குள் செலுத்தப்பட்டது. சுமார் 13 மணி நேர பயணத்திற்கு பின்னர், அது டியாங்காங் விண்வெளி நிலையத்தில் வெற்றி கரமாக இணைந்தது. சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி […]

சீனா, தனக்கென்று சொந்தமாக விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்துள்ளது. அதன் பாகங்களை பல்வேறு கட்டமாக விண்வெளியில் செலுத்தி வருகிறது. அந்த வகையில், நிலையத்தின் மூன்றாவது மற்றும் இறுதி பாகம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. திங்கட்கிழமை மதியம் லாங் மார்ச் 5பி ஒய்4 ராக்கெட் மூலம், ‘மெங்டியன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாகம், விண்வெளிக்குள் செலுத்தப்பட்டது. சுமார் 13 மணி நேர பயணத்திற்கு பின்னர், அது டியாங்காங் விண்வெளி நிலையத்தில் வெற்றி கரமாக இணைந்தது. சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி துறையில் இது மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வை அந்நாட்டின் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையத்தில், முக்கிய பாகமாக தியான்கே பாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்று விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து ஆராய்ச்சி பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, ‘மெங்டியன்’ என்ற மற்றொரு ஆய்வக பாகம் தியான்கே உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மாதம், தியான்ஷோ என்ற ஆளில்லா கலம், டியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், டிசம்பர் மாதம், விண்வெளி வீரர்களை நிலையத்துக்கு அனுப்ப உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது. அத்துடன், அடுத்த வருடம் Xuntian என்ற பெயரில் விண்வெளி தொலைநோக்கி ஒன்றையும் நிறுவ உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இது டியாங்காங் விண்வெளி நிலையத்துடன் இணைப்பில் இருக்காது. ஆனால், அதனுடன் இணைந்த சுற்றுவட்ட பாதையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம், தியான்கே கலத்திற்கு மாற்றாக/ கூடுதல் ஆதரவாக, ‘வெண்டியன்’ என்ற ஆய்வுக் கலத்தை சீனா செலுத்தியது. எனவே, தற்போது, டியாங்காங் விண்வெளி நிலையத்தில், தியான்கே என்ற மூல ஆய்வகம், அதற்கு மாற்றாக செயல்படும் வெண்டியன் ஆய்வகம், தற்போது புதிதாக அனுப்பப்பட்டுள்ள ‘மெங்டியன்’ ஆய்வகம் ஆகியவை உள்ளன. கடந்த 30 வருடங்களாக விண்வெளி ஆராய்ச்சி துறையில் சீனா திறம்பட செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளைச் சார்ந்து இருக்கும் நிலையை மாற்ற, தனியாக விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. டியாங்காங் என்பதற்கு “விண்ணுலக அரண்மனை” என்று பொருளாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu