விண்வெளியில் 1000 நாட்களைக் கடந்த சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையம்

February 1, 2024

சீனா தனக்கென பிரத்தியேகமாக விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்துள்ளது. தியாங்காங் என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையம், விண்வெளியில் 1000 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2021 ஏப்ரல் 29 ஆம் தேதி, தனது பிரத்தியேக விண்வெளி நிலைய கட்டமைப்பை சீனா தொடங்கியது. முதல் கட்டமாக, 54 அடி நீளமுடைய பகுதி விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டது. அதை கணக்கிட்டால், ஜனவரி 24 ஆம் தேதியோடு 1000 நாட்கள் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, டியாங்காங் விண்வெளி நிலையத்தில் பல்வேறு […]

சீனா தனக்கென பிரத்தியேகமாக விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்துள்ளது. தியாங்காங் என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையம், விண்வெளியில் 1000 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 2021 ஏப்ரல் 29 ஆம் தேதி, தனது பிரத்தியேக விண்வெளி நிலைய கட்டமைப்பை சீனா தொடங்கியது. முதல் கட்டமாக, 54 அடி நீளமுடைய பகுதி விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டது. அதை கணக்கிட்டால், ஜனவரி 24 ஆம் தேதியோடு 1000 நாட்கள் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, டியாங்காங் விண்வெளி நிலையத்தில் பல்வேறு பகுதிகள் இணைக்கப்பட்டு, ‘டி’ என்ற ஆங்கில எழுத்தின் வடிவில் விண்வெளி நிலையம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்துடன் ஒப்பிட்டால், வெறும் 20% மட்டுமே இதன் அளவு உள்ளது. ஆனால், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அளப்பரிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது. அத்துடன், ஒரே சமயத்தில் 17 பேர் இந்த விண்வெளி நிலையத்தில் இருந்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu