சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ரஷ்ய பயணத்தில் உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தத்திற்கான முன்னெடுப்புகள் உருவாகும் என்று அமெரிக்காவால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதின் - ஜி ஜின்பிங் சந்திப்பு நிறைவடைந்த நிலையில், போர் நிறுத்தத்திற்கான வழிகள் ஏற்படவில்லை. மாறாக, மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக, சீனா ரஷ்யாவிற்கு துணை நிற்கும் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் 100 வருட சர்வாதிகாரப் போக்கிற்கு முடிவு கட்ட இரு நாடுகளும் ஒன்றிணைந்துள்ளதாக கூறப்படுகிறது. NATO மற்றும் AUKUS அமைப்புகளின் அச்சுறுத்தலை எதிர்க்க, சீனா மற்றும் ரஷ்யா இடையே பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பு கையெழுத்தாகி உள்ளது. மேலும், சீன வர்த்தகத்திற்கு ரஷ்யாவில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் மூலம், ஒட்டுமொத்த உலக நாடுகளும் இரு வேறு பிரிவுகளாக பிரியும் நிலை வலுவடைந்து வருகிறது. இவ்வாறு உலக அரங்கில் பேசப்படுகிறது.