சீனாவை சேர்ந்த தொழில் மற்றும் வர்த்தக வங்கி ஐசிபிசி - தனது அமெரிக்க பிரிவில் ஹேக்கிங் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்க கருவூலத்தில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.ஐ சி பி சி வங்கியை ஹேக் செய்தவர்கள், அதிகமான தொகையை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. லாக்பிட் என்று அழைக்கப்படும் பிரபல சைபர் கிரைம் கும்பல் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படுகிறது. அதே சமயத்தில், ஹேக் செய்யப்பட்ட ஐசிபிசி பிரிவை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட, மற்றும் உலகின் மிகப்பெரிய வங்கியில் இது போன்ற சைபர் தாக்குதல் நடத்தப்படுவது மிகவும் அரிதாக பார்க்கப்படுகிறது. அத்துடன், பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தி உள்ளது.