சீனாவின் CERES-1 Y7 என்ற வணிக ராக்கெட் 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு கொண்டு செல்கிறது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜியுகுவாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து CERES-1 Y7 என்ற ராக்கெட் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் ஜியுகுவாங்-1 உள்பட வணிக ரீதியிலான 7 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இவை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டு உள்ளதாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியுகுவாங்-1-ல் நவீன ரக கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். இது முக்கியமாக பூமி கண்காணிப்பு, இயற்கை வளங்கள், விவசாயம், வனவியல், மற்றும் பேரழிவு குறைப்பு ஆகிய ஆய்விற்காக பயன்படுத்தப்படும்.
மேலும் ராக்கெட்டில் WonderJourney-1A மற்றும் ஸ்டார்பூல் I-1B எனப்படும் செயற்கை நுண்ணறிவு-செயல்படுத்தப்பட்ட தொலைநிலை உணர்திறன் செயற்கைக்கோள்கள் உள்ளது. இது ஒரு செயற்கைக்கோளிலிருந்து மற்றொரு செயற்கைக்கோள் மற்றும் செயற்கைக்கோளிலிருந்து-தரையில் தொடர்பு செலுத்துதல் போன்ற பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.














