ஷாங்காய் மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்கும் சீன அதிபர்

June 30, 2023

இந்தியா தலைமையிலான ஷாங்காய் மாநாட்டில் சீன அதிபர் காணொளி மூலம் பங்கேற்கிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு இந்தியா தலைமை வகித்து வருகிறது. பீஜிங், இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் மாநாடு வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் […]

இந்தியா தலைமையிலான ஷாங்காய் மாநாட்டில் சீன அதிபர் காணொளி மூலம் பங்கேற்கிறார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு இந்தியா தலைமை வகித்து வருகிறது. பீஜிங், இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் மாநாடு வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் காணொளி காட்சி மூலம் பங்கேற்க உள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்ற பின் இந்த அமைப்பின் மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu