ரியல்மி கைப்பேசியின் கொக்கோகோலா பதிப்பு வெளியீடு

February 3, 2023

பிரபல குளிர்பான நிறுவனமான கொக்கோகோலா, கைபேசி வர்த்தகத்தில் ஈடுபட உள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து, கொக்கோகோலா நிறுவனம் ரியல்மி நிறுவனத்துடன் இணைந்து புதிய கைபேசியை வெளியிட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த செய்தி தற்போது உண்மை என தெரியவந்துள்ளது. மேலும், ரியல்மி கைப்பேசியின் கொக்கோகோலா பதிப்பு, வரும் பிப்ரவரி 10ம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. ரியல்மி 10 […]

பிரபல குளிர்பான நிறுவனமான கொக்கோகோலா, கைபேசி வர்த்தகத்தில் ஈடுபட உள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து, கொக்கோகோலா நிறுவனம் ரியல்மி நிறுவனத்துடன் இணைந்து புதிய கைபேசியை வெளியிட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த செய்தி தற்போது உண்மை என தெரியவந்துள்ளது. மேலும், ரியல்மி கைப்பேசியின் கொக்கோகோலா பதிப்பு, வரும் பிப்ரவரி 10ம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ரியல்மி 10 ப்ரோ 5ஜி கைபேசி, கொக்கோகோலா பதிப்புடன் வெளியாக உள்ளது. அதன்படி, கைபேசியின் பின்பக்கம் கொக்கோகோலா குளிர்பான நிறுவனத்தின் சிவப்பு - கருப்பு நிறத்தில் வெளியாக உள்ளது. இடதுபுறம் உள்ள கேமரா அமைப்பு, கருப்பு நிறத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வலது புறம், கொக்கோகோலா என்று எழுதப்பட்ட சிவப்பு நிற அமைப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கைப்பேசிக்கான முன்பதிவுகளை மேற்கொள்ள பிரத்தியேக தளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu